×

ஸ்டாலின் போஸ்டர் விவகாரம் – பெண் திமுக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை திமுக தலைவர் ஸ்டாலினை கேலி செய்து போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கோவையில் காவல் ஆணையர் அலுவலகம் முன்பு பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த மாதம் கோவையில் திமுக தலைவர் ஸ்டாலினை கேலிசெய்யும் விதமாக மர்மநபர்கள் போஸ்டர்கள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்டித்து, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், காவல் ஆணையரிடமும் புகார் அளித்தனர். இந்த சூழலில் கோவையில்
 

கோவை

திமுக தலைவர் ஸ்டாலினை கேலி செய்து போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கோவையில் காவல் ஆணையர் அலுவலகம் முன்பு பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த மாதம் கோவையில் திமுக தலைவர் ஸ்டாலினை கேலிசெய்யும் விதமாக மர்மநபர்கள் போஸ்டர்கள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்டித்து, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், காவல் ஆணையரிடமும் புகார் அளித்தனர். இந்த சூழலில் கோவையில் நேற்று மீண்டும் ஸ்டாலினை கேலிசெய்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ள திமுகவினர், போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை தெப்பக்குளம் மைதானம் பகுதியை சேர்ந்த திமுக தொண்டர் சித்ரகலா என்பவர், போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். அப்போது, திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணை பாட்டிலை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முற்பட்டார். இதனை கண்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், துரிதமாக செயல்பட்டு அவரிடமிருந்த மண்ணெண்ணை பாட்டிலை பறித்தனர். இதனை அடுத்து சித்ரகலா, சாலையில் அமர்ந்து குற்றவாளிகளை கைதுசெய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினார். பின்னர் அவரை கைதுசெய்த போலீசார், காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.