×

கோவையில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது – அமைச்சர் எஸ்.பி வேலுமணி

கோவை கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலாக குறைந்து வருவதாக, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் ராசாமணி, மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை மாவட்டத்தில் கொரனோ வைரஸ் தடுப்பு
 

கோவை

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலாக குறைந்து வருவதாக, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் ராசாமணி, மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன்

உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை மாவட்டத்தில் கொரனோ வைரஸ் தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இ.எஸ்.ஐ மருத்துவமனை, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கொடிசியா சிகிச்சை மையம் உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 4 ஆயிரத்து 917 நபர்கள் சிகிச்சையில் உள்ளதாகவும் கூறினார். மேலும்,.வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ளதை அடுத்து முதலமைச்சர், அமைச்சர்கள், அனைத்து துறை அரசு உயர்

அலுவலர்கள், பேரிடர் மீட்பு குழு என அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை மேற்கொண்டு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளதாகவும் கூறினார். மேலும்,
வைரஸ் தொற்று பேரிடர் காலத்தில் பொது மக்களுக்கு நன்மை பயக்கும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளில் எந்தவித சுணக்கமும் ஏற்படக்கூடாது என்ற நோக்கில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்..