×

கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை; மற்றொருவர் கவலைக்கிடம்

கோவை கோவையில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மருதமலை அடிவார பகுதியான அமர்ஜோதி காலனியை சேர்ந்தவர் சிவமுருகன்(50). இவருக்கு வைரராணி என்ற மனைவியும், யுவஸ்ரீ (22), மற்றும் ஹேமா (19) ஆகிய மகள்களும் உள்ளனர். சிவமுருகன், பால் வியாபாரம் செய்து வந்த நிலையில், அதில் நஷ்டம் ஏற்படவே காந்திபுரத்தில் உள்ள கடையில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள்
 

கோவை

கோவையில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மருதமலை அடிவார பகுதியான அமர்ஜோதி காலனியை சேர்ந்தவர் சிவமுருகன்(50). இவருக்கு வைரராணி என்ற மனைவியும், யுவஸ்ரீ (22), மற்றும் ஹேமா (19) ஆகிய மகள்களும் உள்ளனர். சிவமுருகன், பால் வியாபாரம் செய்து வந்த நிலையில், அதில் நஷ்டம் ஏற்படவே காந்திபுரத்தில் உள்ள கடையில் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் அதனை திருப்பிக் கேட்டு சிவமுருகனுக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், இவரிடம் பணம் பெற்றவர்களும், அதனை திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர். இதனால் குடும்பத்தினர் அனைவரும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த சிவமுருகன் குடும்பத்தினர், நேற்று அதிகாலை பழத்தில் விஷம் தடவி 4 பேரும் சாப்பிட்டுள்ளனர். இதில், 3 சிவமுருகன், வைரராணி மற்றும் யுவஸ்ரீ (22) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்நிலையில் ஹேமாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்ற உறவினர்கள் அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.