×

கொரோனா நிவாரண நிதிக்கு, 1 மாத சம்பளத்தை வழங்கிய ஆயுதப்படை காவலர்!

கோவை கோவையில் கொரோனா நிவாரண நிதிக்கு, தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கிய ஆயுதப்படை காவலருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் கொரோனா 2ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்து 500-க்கும் மேலாக பதிவாகி வரும் நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், கொரோனாவுக்கு எதிரான போரில் தனது பங்களிப்பை அளிக்கும் விதமாக கோவை மாவட்ட ஆயுதப்படையில்
 

கோவை

கோவையில் கொரோனா நிவாரண நிதிக்கு, தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கிய ஆயுதப்படை காவலருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் கொரோனா 2ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்து 500-க்கும் மேலாக பதிவாகி வரும் நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், கொரோனாவுக்கு எதிரான போரில் தனது பங்களிப்பை அளிக்கும் விதமாக கோவை மாவட்ட ஆயுதப்படையில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வரும் பாபு என்பவர், தனது ஒரு மாத சம்பளத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளார்.

இதனையொட்டி, இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வரத்தினத்தை நேரில் சந்தித்து, தனது ஏப்ரல் மாத சம்பள தொகையான ரூ.34 ஆயிரத்து 474-ஐ பாபு வழங்கினார். முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாத சம்பளத்தையும், பாபு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியிருந்தது குறிப்பிடத்துக்கது.

தன்னலமின்றி தனது முழு சம்பளத்தையும் நிவாரண நிதிக்கு வழங்கிய ஆயுதப்படை காவலர் பாபுவை, மாவட்ட எஸ்.பி., செல்வரத்தினம் மற்றும் உயர் அதிகாரிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.