×

ஆன்லைன் வர்த்தக நிறுவனம் முன்பு முதலீட்டாளர் தீக்குளித்து தற்கொலை

கோவை கோவையில் ஷேர் மார்க்கெட்டில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக முதலீட்டாளர் ஒருவர், தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் தனபால்(48). இவருக்கு திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளனர். இவர் கோவை அண்ணா சிலை அருகியுள்ள பார்ச்சூன் என்னும் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளார். கடந்த சில மாதங்களாக பங்குச்சந்தையில் செய்த முதலீடுகள் சரிவை கண்டதால் அந்நிறுவனத்திற்கும், அதில் முதலீடு செய்த
 

கோவை

கோவையில் ஷேர் மார்க்கெட்டில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக முதலீட்டாளர் ஒருவர், தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் தனபால்(48). இவருக்கு திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளனர். இவர் கோவை அண்ணா சிலை அருகியுள்ள பார்ச்சூன் என்னும் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளார். கடந்த சில மாதங்களாக பங்குச்சந்தையில் செய்த முதலீடுகள்

சரிவை கண்டதால் அந்நிறுவனத்திற்கும், அதில் முதலீடு செய்த தனபாலுக்கும் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த தனபால் இன்று காலை, தொழில் நஷ்டம் காரணமாக தற்கொலை செய்துகொள்வதாக கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறி உள்ளார். இதனையடுத்து இருசக்கர வாகனத்தில் பார்ச்சூன் நிறுவனத்துக்கு சென்ற தனபால், அங்கு தான் கொண்டுவந்த எரிபொருளை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை

செய்துகொண்டார். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.