×

கோவை அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் கோரி, பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்!

கோவை கோவை அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் செய்து தருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பயிற்சி மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையொட்டி, மருத்துவமனை டீன் அலுவலகம் முன்பு திரண்ட 50-க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள், சம்பளம் முறையாக வழங்கபடுவதில்லை என்றும், கொரோனா சிகிச்சைக்கு தேவையான தனிமைப்படுத்துதல் வசதி மற்றும் மருந்துகள் தட்டுப்பாடு உள்ளதாகவும் குற்றம்சாட்டினர். மேலும், விடுதியில் தங்கும் இடவசதி, உணவு சரிவர இல்லை என்று குற்றம்சாட்டிய பயிற்சி மருத்துவர்கள்,
 

கோவை

கோவை அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் செய்து தருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பயிற்சி மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையொட்டி, மருத்துவமனை டீன் அலுவலகம் முன்பு திரண்ட 50-க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள், சம்பளம் முறையாக வழங்கபடுவதில்லை என்றும், கொரோனா சிகிச்சைக்கு தேவையான தனிமைப்படுத்துதல் வசதி மற்றும் மருந்துகள் தட்டுப்பாடு உள்ளதாகவும் குற்றம்சாட்டினர்.

மேலும், விடுதியில் தங்கும் இடவசதி, உணவு சரிவர இல்லை என்று குற்றம்சாட்டிய பயிற்சி மருத்துவர்கள், தங்களுடைய பணிச் சுமையை குறைக்க மருத்துவனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியிறுத்தினர்.

பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தம் காணரமாக, கோவை அரசு மருத்தவமனைக்கு சிகிச்சைக்கு வந்திருந்த வெளி நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்