×

ஊரடங்கை மீறி வியாபாரம் – கோவையில் பிரபல ஜவுளிக்கடைக்கு சீல் வைப்பு!

கோவை கோவை ஒப்பணக்கார வீதியில் கொரோனா விதிமுறையை மீறி செயல்பட்ட பிரபல ஜவுளிக்கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். கோவை மாவட்டத்தில் கொரோனா பொதுமுடக்கத்தை ஒட்டி, துணிக்கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை செயல்பட அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இதனால், கோவை மாநகரில் உள்ள அனைத்து ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில், கோவை ஒப்பணக்கார வீதியில் செயல்பட்டு வரும் பிரபல ஜவுளிக்கடையில் பின்புறமாக விற்பனை நடைபெறுவதாக மாநகராட்சி
 

கோவை

கோவை ஒப்பணக்கார வீதியில் கொரோனா விதிமுறையை மீறி செயல்பட்ட பிரபல ஜவுளிக்கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

கோவை மாவட்டத்தில் கொரோனா பொதுமுடக்கத்தை ஒட்டி, துணிக்கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை செயல்பட அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இதனால், கோவை மாநகரில் உள்ள அனைத்து ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், கோவை ஒப்பணக்கார வீதியில் செயல்பட்டு வரும் பிரபல ஜவுளிக்கடையில் பின்புறமாக விற்பனை நடைபெறுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் சென்று பார்த்தபோது, சென்னை சில்க்ஸ் கடையில் பின்புறமாக வியாபாரம் நடைபெற்றது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், ஊரடங்கை மீறி செயல்பட்ட கடையை அதிரடியாக பூட்டி சீல்வைத்தனர். இதனால் கோவை ஒப்பணக்கார வீதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.