×

“கோவை கொடிசியாவில் மீண்டும் கொரோனா சிகிச்சை மையம்” – மாநகராட்சி ஆணையர் தகவல்

கோவை கோவை கொடிசியாவில் மீண்டும் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளதாகவும், முதற்கட்டமாக 700 படுக்கைகள் தாயார் நிலையில் வைக்க உத்தரவிட்டு உள்ளதாகவும், மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும், தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறினார். அதேபோல், கடைகள், வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டோர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற
 

கோவை

கோவை கொடிசியாவில் மீண்டும் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளதாகவும், முதற்கட்டமாக 700 படுக்கைகள் தாயார் நிலையில் வைக்க உத்தரவிட்டு உள்ளதாகவும், மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும், தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறினார். அதேபோல், கடைகள், வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டோர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும், தவறினால் முதற்கட்டமாக அபராதமும், தொடர் அலட்சியம் காட்டினால் பூட்டி சீல் வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், மாநகராட்சி பகுதிகளில் நாள்தோறும் 180 முதல் 220 பேர் வரை, நோய்தொற்றுக்கு உள்ளாவதாக கூறிய ஆணையர், பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சிக்குட்பட்ட தெருக்களுக்கே சென்று, பொது மக்களுக்கு தடுப்பூசி போடும், மொபைல் தடுப்பூசி திட்டம் வரும் 11ஆம் தேதி தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய ஆணையர், 3 பேருக்கு மேல் ஒரு வீதியில் தொற்று ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர்களின் வீடு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப் படுவதாகவும், தற்போது வரை மாநகராட்சிக்குட்பட்ட 35 வார்டுகளில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி உள்ளதாகவும் தெரிவித்தார்.