×

கோவை- பியூட்டி பார்லர் உரிமையாளரை மிரட்டி பணம் பறிப்பு – ஒருவர் கைது

கோவை கோவையில் அரசு அதிகாரி எனக்கூறி அழகு நிலைய உரிமையாளரிடம் .30 ஆயிரம் பணத்தை பறித்துச் சென்ற நபரை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். கோவை சொக்கப்புதூரை சேர்ந்தவர் மதன் கண்ணன். இவர் பீளமேடு ராம்லட்சுமணன் நகரில் பியூட்டி பார்லர் தொழில் தொடங்குவதற்காக ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். கடந்த மாதம் 22ஆம் தேதியன்று, பியூட்டி பார்லரில் பணிபுரிய பெண்களை வேலைக்கு அமர்த்த வேண்டி நேர்காணல் நடத்தியுள்ளார். அப்போது, அழகு நிலையம் சம்பந்தமான துறை அதிகாரி எனக்கூறி கொண்டு
 

கோவை

கோவையில் அரசு அதிகாரி எனக்கூறி அழகு நிலைய உரிமையாளரிடம் .30 ஆயிரம் பணத்தை பறித்துச் சென்ற நபரை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

கோவை சொக்கப்புதூரை சேர்ந்தவர் மதன் கண்ணன். இவர் பீளமேடு ராம்லட்சுமணன் நகரில் பியூட்டி பார்லர் தொழில் தொடங்குவதற்காக ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். கடந்த மாதம் 22ஆம் தேதியன்று, பியூட்டி பார்லரில் பணிபுரிய பெண்களை வேலைக்கு அமர்த்த வேண்டி நேர்காணல் நடத்தியுள்ளார். அப்போது, அழகு நிலையம் சம்பந்தமான துறை அதிகாரி எனக்கூறி கொண்டு அங்கு சென்ற வேலுமணி என்பவர் மதனை மிரட்டி 30,000 ரூபாய் பணத்தை பறித்துச் சென்றுள்ளார்.

மேலும், செல்போனில் தொடர்பு கொண்டு அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி வந்த அவர், நேற்று அழகு நிலையத்திற்கு சென்று மீண்டும் 30 ஆயிரம் கேட்டு மிரட்டியுள்ளார். அக்கம்பக்கத்தினர் கூடியதால் வேலுமணி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து மதன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பீளமேடு போலீசார் வேலுமணியை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்