×

கத்தியுடன் உலா வந்த கஞ்சா வியாபாரிகள்… அதிரடியாக விரட்டிப்பிடித்த போலீசார்…

கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகே கத்தியுடன் இருசக்கர வாகனத்தில் உலா வந்த கஞ்சா வியபாரிகள் மூவரை போலீசார் அதிரடியாக கைதுசெய்தனர். கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே சாமநாயக்கன் பாளையம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பேது அறிவொளி நகர் அருகே இருசக்கர வானகத்தில் வந்த 3 இளைஞர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் வாகனத்தை நிறுத்தாமல் அவர்கள் அதிவேகமாக சென்றனர். இதனை அடுத்து, அவர்கள் வாகனத்தை துரத்திச்சென்ற போலீசார் மூவரையும் மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது
 

கோவை

பெரியநாயக்கன் பாளையம் அருகே கத்தியுடன் இருசக்கர வாகனத்தில் உலா வந்த கஞ்சா வியபாரிகள் மூவரை போலீசார் அதிரடியாக கைதுசெய்தனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே சாமநாயக்கன் பாளையம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பேது அறிவொளி நகர் அருகே இருசக்கர வானகத்தில் வந்த 3 இளைஞர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் வாகனத்தை நிறுத்தாமல் அவர்கள் அதிவேகமாக சென்றனர். இதனை அடுத்து, அவர்கள் வாகனத்தை துரத்திச்சென்ற போலீசார் மூவரையும் மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களின் உடைகளை சோதனையிட்டனர். அப்போது மூவரிடமும் கத்தி மற்றும் 200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, அவர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அதில், கைதானவர்கள் கோவையை சேர்ந்த கமலேஷ், சென்னையை சேர்ந்த பாண்டி மற்றும் விருதுநகரை சேர்ந்த ராஜ்குமார் என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் வெளியூர்களில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, கோவையில் விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனை அடுத்து, மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்த போலீசார், அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.