×

கோவை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்- போலீசார் தீவிர சோதனை!

கோவை கோவை ரயில் நிலையத்திற்கு மர்மநபர் ஒருவர் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தை தொடர்ந்து, ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர், கேரளாவை சேர்ந்த 2 நபர்கள் கோவை ரயில் நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து கட்டுப்பாட்டு அறை போலீசார், உடனடியாக கோவை மாவட்ட போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார்,
 

கோவை

கோவை ரயில் நிலையத்திற்கு மர்மநபர் ஒருவர் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தை தொடர்ந்து, ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர், கேரளாவை சேர்ந்த 2 நபர்கள் கோவை ரயில் நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து கட்டுப்பாட்டு அறை போலீசார், உடனடியாக கோவை மாவட்ட போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில், போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் கோவை ரயில் நிலையத்துக்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நடைமேடைகள் மற்றும் பணிகளின் உடமைகளை சோதனை செய்த போலீசார், கோவைக்கு கேரளா மற்றும் சென்னையில் இருந்து வந்த ரயில்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

பல மணி நேரமாக நடந்த இந்த சோதனையில் வெடிபொருட்கள் எதுவும் சிக்காத நிலையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. அடுத்து, போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் வழக்குப்பதிவுசெய்த மர்மநபர் குறித்து தீவிர விசாரண மேற்கொண்டு வருகின்றனர்.