×

வானதி சீனிவாசன் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு… கோவை காவல் ஆணையரிடம் பாஜகவினர் புகார்!

கோவை வானதி சீனிவாசன் குறித்து, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கோவை மாநகர காவல் ஆணையரிடம் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. கோவை மாநகர் மாவட்ட பாஜக செயலாளர் மோகனாம்பாள் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட பெண் நிர்வாகிகள் காவல் ஆணையரிடம் மனுவை வழங்கினர். அதில், பாஜக மகளிரணி தேசிய செயலாளராகவும், கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ள வானதி சீனிவாசன் குறித்து, கோவை மாவட்டத்தை சேர்ந்த கோவை ரவிச்சந்திரன் என்பவர்,
 

கோவை

வானதி சீனிவாசன் குறித்து, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கோவை மாநகர காவல் ஆணையரிடம் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

கோவை மாநகர் மாவட்ட பாஜக செயலாளர் மோகனாம்பாள் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட பெண் நிர்வாகிகள் காவல் ஆணையரிடம் மனுவை வழங்கினர். அதில், பாஜக மகளிரணி தேசிய செயலாளராகவும், கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ள வானதி சீனிவாசன் குறித்து, கோவை மாவட்டத்தை சேர்ந்த கோவை ரவிச்சந்திரன் என்பவர், தனது முகநுல் பக்கத்தில் தரக்குறைவாக அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், அதனை எஸ்.ஜெகநாதன் என்பவர் பலருக்கு பகிர்ந்து வருவதாகவும் தெரிவிதுள்ளனர். அதேபோல், கோவையை சேர்ந்த கீதா என்பவர் தனது யூடியூப் சேனலில் பல மாதங்களாக பாஜக குறித்தும், வானதி சீனிவாசன் குறித்தும் அவதூறான கருத்துக்களை வெளியிட்டு உள்ளதாகவும், குறிப்பிட்ட இந்த பதிவுகளை பார்க்கும் பலரும் மனஅதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

எனவே, குறிப்பிட்ட 3 பேரின் பதிவுகளை போலீசா ஆய்வுசெய்து, அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கெண்டுள்ள பாஜக நிர்வாகிகள், குறிப்பிட்ட அந்த பதிவுகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளனர்.