×

கோவையில் வங்கி ஏ.டி.எம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சி… மர்மநபருக்கு போலீஸ் வலை!

கோவை கோவை செல்வபுரம் பகுதியில் பொதுத்துறை வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, பணத்தை கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். கோவை செல்வபுரம் சிவாலயா சந்திப்பு அருகே பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்துக்குள் இன்று அதிகாலை 2 மணி அளவில் புகுந்த மர்மநபர் ஒருவர், கல்லை கொண்டு ஏ.டி.எம்மை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றார். ஆனால், இயந்திரத்தை உடைக்க முடியாததால், அந்த நபர் ஏமாற்றத்துடன் தப்பி ஓடினார். இதனால்,
 

கோவை

கோவை செல்வபுரம் பகுதியில் பொதுத்துறை வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, பணத்தை கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை செல்வபுரம் சிவாலயா சந்திப்பு அருகே பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்துக்குள் இன்று அதிகாலை 2 மணி அளவில் புகுந்த மர்மநபர் ஒருவர், கல்லை கொண்டு ஏ.டி.எம்மை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றார். ஆனால், இயந்திரத்தை உடைக்க முடியாததால், அந்த நபர் ஏமாற்றத்துடன் தப்பி ஓடினார்.

இதனால், ஏ.டி.எம்-மில் இருந்த லட்சக்கணக்கான பணம் தப்பியது. இதனிடையே கொள்ளை முயற்சி குறித்து, ஐதராபாத்தில் உள்ள வங்கி அலுவலகத்துக்கு தகவல் கிடைக்கவே, அவர்கள் உடனடியாக செல்வபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது, கொள்ளையன் தப்பியது தெரிய வந்தது.

இதனையடுத்து, போலீசார் ஏ.டி.எம். மையத்தில் இருந்த சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், கல்லால் தாக்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றது தெரிய வந்தது. இதனை அடுத்து, வங்கி அதிகாரிகள் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த செல்வபுரம் போலீசார், சிசிடிவி பதிவு அடிப்படையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.