×

உதவி பேராசிரியர் பணி நியமன விவகாரம்- வேளாண் பல்கலை.யில், முனைவர் பட்டதாரிகள் போராட்டம்

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு, அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இருந்து ஆட்களை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து, முனைவர் பட்டதாரிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் கடந்த 2014ஆம் ஆண்டிற்கு பிறகு உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்ப படாமல் உள்ளது. இதனால் சுமார் 200 இடங்கள் வரை காலியாக உள்ள நிலையில, இந்த இடங்களுக்கு, அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் உதவி பேராசிரியர்களை நியமிக்க பல்கலைக்கழக
 

கோவை

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு, அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இருந்து ஆட்களை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து, முனைவர் பட்டதாரிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் கடந்த 2014ஆம் ஆண்டிற்கு பிறகு உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்ப படாமல் உள்ளது. இதனால் சுமார் 200 இடங்கள் வரை காலியாக உள்ள நிலையில, இந்த இடங்களுக்கு, அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் உதவி பேராசிரியர்களை நியமிக்க பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள வேளாண் முனைவர் பட்டதாரி மாணவர்கள் இன்று பல்கலை வளாகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பல்கலைக் கழகத்தின் இந்த முடிவால் ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட முனைவர் பட்டதாரிகள் பாதிக்கப் படுவதாக தெரிவித்தனர். எனவே, அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இருந்து ஆட்களை நியமிக்கும் முடிவை கைவிட்டு, தங்களை நியமிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். அத்துடன், இதுகுறித்து பல்கலைக் கழக பதிவாளரிடம் மனு அளித்து உள்ளதாக கூறிய அவர்கள், உரிய தீர்வு கிடைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.