×

கோவையில் சாலை பாதுகாப்பு இருசக்கர வாகன பேரணி… காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்…

கோவையில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவல்துறை சார்பில் நடந்த இருசக்கர வாகன பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் 32-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர காவல் துறை மற்றும் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. கோவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த
 

கோவையில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவல்துறை சார்பில் நடந்த இருசக்கர வாகன பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

தமிழகம் முழுவதும் 32-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர காவல் துறை மற்றும் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

கோவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த பேரணியில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் ஆகியோர் கலந்துகொண்டு, கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர். இதில் மாவட்ட காவல்துறை மற்றும் அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த ஆயிரம் பேர் இருசக்கர வாகனங்களில் கலந்துகொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.