×

“கொரோனா தடுப்பூசி வழங்க 47,200 மையங்கள்” – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

கோவை தமிழத்தில் கொரோனா தடுப்பூசி வழங்க 47 ஆயிரத்து 200 மையங்கள் அமைக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் 17 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுவதாகவும், 2.5 கோடி தடுப்பூசிகளை சேகரிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுகப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், கொரோனா தடுப்பூசி 3 கட்டமாக வழங்கப்பட உள்ளதாக கூறிய அவர், யார் தடுப்பூசி போட்டாலும் 30 நிமிடம் அங்கேயே இருக்க வேண்டும் என்றும்,
 

கோவை

தமிழத்தில் கொரோனா தடுப்பூசி வழங்க 47 ஆயிரத்து 200 மையங்கள் அமைக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் 17 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுவதாகவும், 2.5 கோடி தடுப்பூசிகளை சேகரிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுகப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், கொரோனா தடுப்பூசி 3 கட்டமாக வழங்கப்பட உள்ளதாக கூறிய அவர், யார் தடுப்பூசி போட்டாலும் 30 நிமிடம் அங்கேயே இருக்க வேண்டும் என்றும், அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் கூறினார். 2 மணி நேரத்திற்கு 25 பேருக்கு தான் தடுப்பூசி வழங்க உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ளதாக கூறிய, அவர் விரைவில் நல்ல செய்தி வரும் என்றும் தெரிவித்தார். மேலும், கொரோனா தடுப்பூசி வழங்க 47 ஆயிரத்து 200 மையங்கள் அமைக்கப்பட்டு, அங்கு தடுப்பூசி வழங்கப்படும் என்ற அமைச்சர் விஜயபாஸ்கர், முதலில் முன் களப்பணியாளர்களுக்கே தடுப்பூசி வழங்கப்படும் என்றும் கூறினார்