×

கோவை: திமுகவினர் கைதை கண்டித்து உதயநிதி ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்

திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்து ஒட்டிய போஸ்டர்களை கிழித்த திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து, கோவையில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், குனியமுத்தூர் காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என
 

திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்து ஒட்டிய போஸ்டர்களை கிழித்த திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து, கோவையில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், குனியமுத்தூர் காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

மேலும், நீட் தேர்வை தமிழகத்திற்குள் அனுமதித்தது எடப்பாடி பழனிசாமி அரசு தான் என்று கூறிய அவர், இதனால் வெறும் 8 அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வில் மருத்துவராக முடியும் நிலை இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், 7.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் முதலமைச்சர் ஆளுநரின் ஒப்புதலை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுகொண்டார்.