×

செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை!

கோவை கோவையில் செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர் கண்டித்ததால் 10ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவை ரத்தினபுரி சண்முக நரை சேர்ந்தவர் கண்ணன் என்கிற அப்துல் காதர் (42). இவரது மகள் பவுசியா (15). இவர் கணபதி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து வந்த பவுசியா, செல்போன் மூலம் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வந்துள்ளார். வகுப்பு நேரம் தவிர்த்து, மற்ற நேரங்களிலும்
 

கோவை

கோவையில் செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர் கண்டித்ததால் 10ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை ரத்தினபுரி சண்முக நரை சேர்ந்தவர் கண்ணன் என்கிற அப்துல் காதர் (42). இவரது மகள் பவுசியா (15). இவர் கணபதி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து வந்த பவுசியா, செல்போன் மூலம் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வந்துள்ளார். வகுப்பு நேரம் தவிர்த்து, மற்ற நேரங்களிலும் செல்போனிலேயே மூழ்கி கிடந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவரை பெற்றோர் கண்டித்து உள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக பவுசியா மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய பெற்றோர் மகள் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து தந்தை அப்துல்காதர் அளித்த புகாரின் பேரில், துடியலூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.