×

பூட்டிய வீட்டில் திருடியவரை, அயர்லாந்தில் இருந்து பிடித்துக்கொடுத்த உரிமையாளர்

சென்னை போரூர் அருகே பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையடித்த நபரை, அயர்லாந்தில் இருந்த உறவினர் சிசிடிவி கேமரா மூலம் போலீசில் பிடித்துக் கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. போரூர் அடுத்த செட்டியார் அகரம் மூர்த்தி நகர் 1-வது மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் சண்முக சுந்தரவள்ளி(67). இவருக்கு அருள்முருகன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமான நிலையில், அருள்முருகன் அயர்லாந்தில் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், சண்முக சுந்தரவள்ளி நேற்று தனது மகளை காண்பதற்காக வீட்டை
 

சென்னை போரூர் அருகே பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையடித்த நபரை, அயர்லாந்தில் இருந்த உறவினர் சிசிடிவி கேமரா மூலம் போலீசில் பிடித்துக் கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

போரூர் அடுத்த செட்டியார் அகரம் மூர்த்தி நகர் 1-வது மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் சண்முக சுந்தரவள்ளி(67). இவருக்கு அருள்முருகன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமான நிலையில், அருள்முருகன் அயர்லாந்தில் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், சண்முக சுந்தரவள்ளி நேற்று தனது மகளை காண்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு அண்ணாநகர் சென்றுள்ளார். அப்போது, இரவு தூங்க செல்வதற்கு முன்பு தாய் என்ன செய்கிறார்? என்பதை பார்ப்பதற்காக, வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை தனது செல்போனில் அருள்முருகன் பார்த்துள்ளார். அப்போது வீட்டிற்குள் ஆள்நடமாட்டம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து. மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், வீட்டின் காம்பவுண்டில் இருந்து குதித்து வெளியேவந்த நபரை மடக்கிப் பிடித்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர், செங்கல்பட்டை சேர்ந்த முரளி என்கிற சைக்கோ முரளி(25) என்பதும், வீடு பூட்டி இருப்பதை கண்டறிந்து வீட்டிற்குள் சென்று லேப்டாப்பை திருடியதும் தெரியவந்தது.

மேலும், இவர் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. அத்துடன், எந்த வீட்டின் முன்பு கோலம் போட வில்லையோ அந்த வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையடிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்த முரளி, இதுவரை 4 இடங்களில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு, நான்கு முறையும் போலீசாரிடம் சிக்கிக் கொண்டதும் தெரியவந்தது. இதனையடுத்து முரளியை கைதுசெய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.