×

தனியார் நிறுவன பராமரிப்பு பணியின்போது, மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு

குன்றத்தூர் அருகே பராமரிப்பு பணியின்போது மின்சார ஒயரில், இரும்பு ஏணி உரசியதில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்தனர். சென்னை குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் சிப்காட்டில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் மோல்டிங் செய்யும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் ஷெட்டரை பழுதுநீக்கும் பணியில் இன்று காலை அனகாபுத்தூரை சேர்ந்த முருகன், நாகராஜ், ஆனந்த் ஆகியோர் ஈடுபட்டு உள்ளனர். அப்போது வேலை செய்வதற்காக நிறுவனத்தின் உள்ளே இருந்த 20 அடி உயர இரும்பு ஏணியை மூவரும் வெளியே தூக்கி
 

குன்றத்தூர் அருகே பராமரிப்பு பணியின்போது மின்சார ஒயரில், இரும்பு ஏணி உரசியதில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்தனர். சென்னை குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் சிப்காட்டில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் மோல்டிங் செய்யும் நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்த நிறுவனத்தின் ஷெட்டரை பழுதுநீக்கும் பணியில் இன்று காலை அனகாபுத்தூரை சேர்ந்த முருகன், நாகராஜ், ஆனந்த் ஆகியோர் ஈடுபட்டு உள்ளனர். அப்போது வேலை செய்வதற்காக நிறுவனத்தின் உள்ளே இருந்த 20 அடி உயர இரும்பு ஏணியை மூவரும் வெளியே தூக்கி வந்துள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக ஏணி அருகே சென்ற உயர்அழுத்த மின்சார ஒயர் மீது உரசியது. இதில், மின்சாரம் தாக்கியதில் முருகன், நாகராஜ் ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட ஆனந்த் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதனை அடுத்து அவரை பொதுமக்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்தூர் போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மின் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரையும் வேலைக்கு அழைத்துச்சென்ற அற்புதகுமார் என்பவரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.