×

சென்னைக்கு மாஸ்க்-ல் மறைத்து கடத்தி வந்த ரூ.3 லட்சம் தங்கம் பறிமுதல்!

சென்னை துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணி நூதன முறையில் கடத்திவந்த ரூ.3 லட்சம் தங்கம் மற்றும் ரூ.8 லட்சம் மதிப்பிலான ஐபோன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து நேற்று சென்னைக்கு வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் சுங்கத் துறையினர் சோதனையிட்டனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் புதுக்கோட்டையை சேர்ந்த முகமது அப்துல்லா என்ற பயணியை தனியோ அழைத்துச்சென்று சோதனையிட்டனர்.அப்போது,
 

சென்னை

துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணி நூதன முறையில் கடத்திவந்த ரூ.3 லட்சம் தங்கம் மற்றும் ரூ.8 லட்சம் மதிப்பிலான ஐபோன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

துபாயில் இருந்து நேற்று சென்னைக்கு வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் சுங்கத் துறையினர் சோதனையிட்டனர்.

அப்போது, சந்தேகத்தின் பேரில் புதுக்கோட்டையை சேர்ந்த முகமது அப்துல்லா என்ற பயணியை தனியோ அழைத்துச்சென்று சோதனையிட்டனர்.அப்போது, அவர் அணிந்திருந்த முக கவசத்திற்குள் தங்கத்தை பசை வடியில் மாற்றி தகடுபோல மறைத்து கடத்திவந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, அவரிடம் இருந்து 3 லட்சம் மதிப்பிலான 85 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், அவரது உடமைகளுக்குள் மறைத்து 8 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான விலை உயர்ந்த ஐபோன்கள், லேப்டாப்கள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து முகமது அப்துல்லாவிடம் சுங்க அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.