×

இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய கமல்ஹாசன் – பூந்தமல்லியில் முடங்கிய போக்குவரத்து

சென்னை சென்னை பூந்தமல்லி பகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரம் காரணமாக சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் சென்னையில் இன்று தனது இரண்டாம் கட்ட பிரசாரத்தை தொடங்கினார். ஆலந்தூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொடங்கி போரூர், பூந்தமல்லி வழியாக காஞ்சிபுரம் நோக்கி சென்ற அவருக்கு, வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக பூந்தமல்லி பகுதிக்கு
 

சென்னை

சென்னை பூந்தமல்லி பகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரம் காரணமாக சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் சென்னையில் இன்று தனது இரண்டாம் கட்ட பிரசாரத்தை தொடங்கினார்.

ஆலந்தூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொடங்கி போரூர், பூந்தமல்லி வழியாக காஞ்சிபுரம் நோக்கி சென்ற அவருக்கு, வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக பூந்தமல்லி பகுதிக்கு வந்த கமலஹாசனுக்கு, தொண்டர்கள் சார்பில் மலர்தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, 100-க்கும் மேற்பட்ட தொண்டர்கள், கமலஹாசன் வருகையால் சாலையில் செல்லும் பேருந்து மற்றும் வாகனங்களை மறித்து நிறுத்தினர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.


பூந்தமல்லி பகுதிக்கு மாலை 4 மணிக்கு வருவதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில் 6 மணியளவில் தான் அவர் வந்தடைந்தார். இதனால் பூந்தமல்லியில் இருந்து குமணன் சாவடி வரை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வேலையைவிட்டு வீட்டுக்கு செல்வோர், வாகன ஓட்டிகள் என சிரமத்திற்கு உள்ளாகினர்.