×

சென்னைபோலி ஆவணம் மூலம் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட கும்பல் கைது

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.14 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ராஜேஷ் அந்த வங்கியில் விசாரித்தபோது, அவர் மோட்டார் சைக்கிள் வாங்கியதற்காக பணம் பிடிக்கப் பட்டுள்ளது என கூறியுள்ளனர். அப்போது, தான் ஏதும் மோட்டார் சைக்கிள் வாங்கவில்லை என்றும், ஆவணத்தை பாரத்தபோது அதில் உள்ள புகைப்படம் தன்னுடையது அல்ல என்று தெரிவித்தார். இது குறித்து புகார் அளித்ததன் பேரில், போலீசார் விசாரணை செய்து வந்தனர்.அப்போது திருவேற்காட்டை சேர்ந்த
 

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.14 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராஜேஷ் அந்த வங்கியில் விசாரித்தபோது, அவர் மோட்டார் சைக்கிள் வாங்கியதற்காக பணம் பிடிக்கப் பட்டுள்ளது என கூறியுள்ளனர்.

அப்போது, தான் ஏதும் மோட்டார் சைக்கிள் வாங்கவில்லை என்றும், ஆவணத்தை பாரத்தபோது அதில் உள்ள புகைப்படம் தன்னுடையது அல்ல என்று தெரிவித்தார்.

இது குறித்து புகார் அளித்ததன் பேரில், போலீசார் விசாரணை செய்து வந்தனர்.
அப்போது திருவேற்காட்டை சேர்ந்த யோகேஸ்வரன்(31), என்பவர் ராஜேஷ் பெயரிலான ஆவணங்கள் கொடுத்து மோட்டார் சைக்கிள் வாங்குவதாக தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர் அளித்த தகவலின்பேரில் மதுரவாயலை சேர்ந்த ராஜேஷ்(32), விக்னேஷ்(23), உள்ளிட்ட மேலும் இரண்டு பேரையும் கைது செய்து விசாரித்தபோதுதான் ராஜேஷ் பெயரில் போலியான ஆவணங்களை தயார் செய்து மோட்டார் சைக்கிள்கள் வாங்கியது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில் : ராஜேஷ் அந்த பகுதியில் உள்ள வாலிபர்களுக்கு செல்போன்களை தவணைமுறையில் வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த செல்போன் கடையில் யோகேஸ்வரன், விக்னேஷ் ஆகியோர் மாதத் தவணையில் செல்போன் வாங்கிக் கொடுப்பது தொடர்பான ஆவணங்களை தயார் செய்து கொடுத்து வந்துள்ளனர்.
அப்போது அங்கு செல்போன் வாங்க வந்த நீலகிரி ராஜேஷின் ஆவணங்களை நகல் எடுத்து வைத்துக்கொண்டு தனது நண்பரின் பெயரும் ராஜேஷ் என்பதால் அவரது முகவரியில் புகார்தாரரின் புகைப்படத்தை ஒட்டி அவரது வங்கி கணக்கில் மோட்டார் சைக்கிள் எடுத்தது தெரிய வந்துள்ளது.

தற்போது அவரது பெயரில் இதுவரை 6 மோட்டார் சைக்கிள்கள் எடுத்து மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் மாதத் தவணைகள் எடுக்க முடியாததால் தற்போது பணம் எடுத்தபோது தெரியவந்ததாகவும் இதுகுறித்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.