×

செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 20.70 அடியாக உயர்வு

சென்னை தொடர் மழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஒரேநாளில் ஏரியின் நீர்மட்டம் 145 மில்லியன் கனஅடி உயர்ந்தது. சென்னையின் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி, கிருஷ்ணா நதி நீரின் வருகை மற்றும் தொடர் மழையினால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு வினாடிக்கு ஆயிரத்து 720 கனஅடி நீர் வந்துகொண்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 20.70 அடியாகவும், நீரின் மொத்த கொள்ளளவு 2 ஆயிரத்து
 

சென்னை

தொடர் மழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஒரேநாளில் ஏரியின் நீர்மட்டம் 145 மில்லியன் கனஅடி உயர்ந்தது. சென்னையின் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி, கிருஷ்ணா நதி நீரின் வருகை மற்றும் தொடர் மழையினால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு வினாடிக்கு ஆயிரத்து 720 கனஅடி நீர் வந்துகொண்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 20.70 அடியாகவும், நீரின் மொத்த கொள்ளளவு 2 ஆயிரத்து 781 மில்லியன் கனஅடியாகவும் உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பெய்த மழையின் காரணமாக ஒரேநாளில் 145 மில்லியன் கன அடி நீர் உயர்ந்துள்ளது. தற்போது கிருஷ்ணா நதி நீரின் வரத்து குறைந்துள்ள நிலையில, அதிகளவில் மழை நீர் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.

மழை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில், இன்னும் ஓரிரு நாட்களில் செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்தறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே கடல்போல காட்சியளித்து வரும் செம்பரம்பாக்கம் ஏரியை, சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கின்றனர்.