×

காலிமனை வரிவிதிப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஆவடி மாநகராட்சி பில் கலெக்டர், உதவியாளர் கைது

சென்னை காலிமனை வரி விதிப்புக்கு 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற ஆவடி மாநகராட்சி பில் கலெக்டர் மற்றும் அவரது உதவியாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக கைதுசெய்தனர். சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவரது காலிமனைக்கு வரி விதிப்பது தொடர்பாக, ஆவடி மாநகராட்சியில் பில் கலெக்டராக உள்ள கார்த்திக் என்பவர் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அதனை விரும்பாத கலைச்செல்வி இதுகுறித்து, லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்தார். தொடர்ந்து லஞ்ச
 

சென்னை

காலிமனை வரி விதிப்புக்கு 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற ஆவடி மாநகராட்சி பில் கலெக்டர் மற்றும் அவரது உதவியாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக கைதுசெய்தனர்.

சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவரது காலிமனைக்கு வரி விதிப்பது தொடர்பாக, ஆவடி மாநகராட்சியில் பில் கலெக்டராக உள்ள கார்த்திக் என்பவர் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அதனை விரும்பாத கலைச்செல்வி இதுகுறித்து, லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்தார். தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழங்கிய அறிவுரைப்படி இன்று அவர் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று பில் கலெக்டர் கார்த்திக்கிடம் லஞ்ச பணத்தை கொடுக்க முயன்றார்.

அப்போது, கார்த்திக்கிற்கு பதிலாக அவரது உதவியாளர் வின்சென்ட் என்பவர் லஞ்ச பணத்தை பெற்றபோது, அங்கு மறைந்திருந்த ஏடிஎஸ்பி சீனிவாச பெருமாள் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், வின்சென்டை கைதுசெய்ய முயன்றனர். இதனை கண்டு அவர் தப்பியோடியதால், காவல்துறையினர் துரத்திச்சென்று பிடித்தனர். தொடர்ந்து, பில் கலெக்டர் கார்த்திக்கை கைதுசெய்த போலீசார் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.லஞ்ச ஒழிப்பு சோதனை காரணமாக ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.