×

நாகையில் ஆலீவ்ரெட்லி ஆமைக்குஞ்சுகளை கடலில் விடும் பணியை துவங்கிவைத்த ஆட்சியர்!

 

நாகை மாவட்ட வனத்துறை சார்பில் அரிய வகை ஆலீவ்ரெட்லி ஆமைக் குஞ்சுகளை கடலில் விடும் பணியை, ஆட்சியர் அருண்தம்புராஜ் துவங்கி வைத்தார்.

நாகை மாவட்ட வனத்துறை சார்பில் சாமந்தான்பேட்டை கடற்கரை பகுதியில் அரிய வகை கடல்வாழ் உயிரினமான ஆலீவ்ரெட்லி கடல் ஆமை குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்பு ராஜ், மாவட்ட வன அலுவலர் யோகேஷ்குமார் மீனா ஆகியோர் கலந்து கொண்டு, ஆலிவ்ரெட்லி ஆமை குஞ்சுகளை கடலில் விடும் பணியை துவங்கி வைத்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் அருண் தம்புராஜ்,  கடல்வாழ் ஊயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஆலீவ்ரெட்லி வகை ஆமைகள் முக்கிய பங்கு வகிப்பதகாவும், கடந்தாண்டு நாகை மாவட்டத்தில் 30 ஆயிரம் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு, அதிலிருந்து வெளியான குஞ்சுகள் கடலில் விடப்பட்டதாகவும் கூறினார். மேலும், நடப்பாண்டு,25 ஆயிரம் ஆமைக் குஞ்சுகளை கடலில் விடுவதற்கு வனத்துறையினர் இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாகவும், ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்தார்.