×

நெல்லையில் பேருந்து நிலையத்தில் மோதிக்கொண்ட பள்ளி மாணவிகளால் பரபரப்பு!

 

நெல்லை பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் குறித்த வீடியோக காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை பள்ளி முடிந்து மாணவ, மாணவிகள் தங்கள் ஊர்களுக்கு செல்வதற்காக காத்திருந்தனர். அப்போது, அங்கு நின்றிருந்த பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவிகளில் 2 பேருக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் இரண்டு மாணவிகளும் ஒருவரை ஒருவர் முடியை பிடித்து இழுத்துக்கொண்டு மோதலில் ஈடுபட்டனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் அந்த மாணவிகளை விலக்கி விட முயன்றனர். எனினும் மாணவிகள் இருவரும் தொடர்ந்து  ஒருவரை ஒருவர் முடியை பிடித்து இழுத்தபடி மோதலில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து, அருகில் இருந்தவ பெரியவர்களை அவர்களை கண்டித்து கலைந்து போக செய்தனர். இந்த சம்பவம் காரணமாக பாளையங்கோட்டை பேருந்து நிலையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, மாணவிகள் மோதல் சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.