×

மருத்துவரிடம் இணைய வழியில் மோசடி செய்யப்பட்ட ரூ.2 லட்சம் பணம் மீட்பு!

 

ராமநாதபுரத்தில் மருத்துவரிடம் இணைய வழியில் மோசடி செய்யப்பட்ட ரூ.2 லட்சம் பணத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் இவரது செல்போனுக்கு வங்கிக் கணக்குடன் பான் கார்டை இணைக்கும்படி குறுஞ்செய்தி ஓன்று வந்துள்ளது. இதனை அடுத்து, அந்த குறுஞ்செய்தியில் உள்ள லிங்கை மணிகண்டன் கிளிக் செய்து, அதில் கேட்கப்பட்ட வங்கிக்கணக்கு உள்ளிட்ட விபரங்களை பதிவிட்டு உள்ளார். அப்போது, அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.2 லட்சம் பணம் எடுக்கப்பட்டதாக செய்து வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர் மணிகண்டன், இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசாரின் துரதமான நடவடிக்கை காரணமாக சம்பந்தப்பட்ட வங்கிக்கணக்கு முடக்கப்பட்டு ரூ.2 லட்சம் பணம் மீட்கப்பட்டது. இதனை தொடர்ந்து, நேற்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மருத்துவர் மணிகண்டனிடம், மீட்கப்பட்ட பணத்தை எஸ்பி தங்கதுரை ஒப்படைத்தார். இந்த நிகழ்வின்போது மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் எஸ்பி பாஸ்கரன் உடனிருந்தார்.