×

பெருந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கல்!

 

பெருந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட 6 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 644 மாணவ - மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை, எம்எல்ஏ ஜெயக்குமார் வழங்கினார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 6 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மேல்நிலை வகுப்பில் படிக்கும் 644 மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா இலவச மிதி வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரும், மாநில அம்மா பேரவை இணை செயலாளருமான எஸ்.ஜெயக்குமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.

இதன்படி, பெருந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட விஜயமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி, திங்களூர் அரசு மேல்நிலைப்பள்ளி, துடுப்பதி அரசு மேல்நிலைப்பள்ளி, நல்லாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, பெருந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஈங்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 பள்ளிகளில் படிக்கும் 644 மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பெருந்துறை யூனியன் சேர்மன் சாந்தி ஜெயராஜ் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ பொன்னுசாமி, ஒன்றிய துணை சேர்மன் உமா மகேஸ்வரன், அதிமுக நிர்வாகிகள் விஜயன் என்கிற ராமசாமி, துரைசாமி, மூங்கில்பாளையம் சுரேஷ், கே பி எஸ் மணி,  டிடி ஜெகதீஷ், ஏகே சாமிநாதன், திங்களூர் கந்தசாமி, பொன்னுசாமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் விஜயலட்சுமி சாமிநாதன், ரொட்டி பழனிசாமி,  ஊராட்சி மன்ற தலைவர்கள் சீனிவாசன்,  கீதா வேலாயுதசாமி, கவிதா அன்பரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.