×

நசியனூர் அருகே வீட்டு கழிப்பறைக்குள் புகுந்த நல்லப்பாம்பால் பரபரப்பு!

 

ஈரோடு அருகே விவசாயி வீட்டின் கழிவறையில் புகுந்த 7 அடி நீளமுடைய நல்லப்பாம்பை, பாம்பு பிடி வீரர் லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்..

ஈரோடு அடுத்த நசியனூர் முள்ளம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விவசாயி திவாகர். நேற்று இவரது வீட்டின் கழிவறையில் இருந்து வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது. இதனால் திவாகர் சென்று பார்த்தபோது, அங்க 7 அடி நீளமுடைய நல்லப்பாம்பு ஒன்று படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உடனடியாக ஈரோட்டை சேர்ந்த பாம்பு பிடி வீரர் யுவராஜுக்கு தகவல் தெரிவித்தார்.  அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாம்பு பிடி வீரர் யுவராஜ், கழிவறைக்குள் புகுந்து அச்சுறுத்திய நாகப் பாம்பை லாவகமாக பிடித்தார்.

பின்னர் அதன் சிற்றத்தை தணிக்க, அதன் மேல் தண்ணீரை ஊற்றினார். தொடர்ந்து, பிடிபட்ட நல்லப்பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்டதால் பாம்புகள் கண்ணீர் இருக்கும் இடங்களை நோக்கி அதிகளவில் வருகிறது என்றும், எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதேபோல், செருப்பு வைக்கும் இடம், பழைய மரச்சாமான்கள் வைக்கும் இடத்தில் கவனமாக கையாள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.