×

ஜவ்வாது மலையில் விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்த்த நபர் கைது!

 

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை பகுதியில் விவசாய நிலத்தில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகளை அழித்த மதுவிலக்குப்பிரிவு போலீசார், இது தொடர்பாக நிலத்தின் உரிமையாளரை கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை பகுதியில் விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக, மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி கணேஷ் தலைமையில் ஆய்வாளர் ஜெயந்தி மற்றும் போலீசார், ஜவ்வாது மலை பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, கல்லாவூர் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கஞ்சா செடிகள் பயிரிட்டு வளர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து மதுவிலக்குப்பிரிவு போலீசார், அவற்றை தீவைத்து அழித்தனர். கஞ்சா செடிகளை வளர்த்தது தொடர்பாக செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய குப்பன் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.