×

நாமக்கல் மாவட்டத்தில் கண்மாய்களில் இலவசமாக வண்டல் மண் எடுக்க விண்ணபிக்கலாம் - ஆட்சியர் தகவல்!

 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 39 கண்மாய்களில் இருந்து வண்டல் மண்ணை இலவசமாக எடுத்து பயன்படுத்த விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு விவசாயிகள் நலன்கருதி ஏரி, குளங்களில் வணடல் மண்ணை இலவசமாக எடுத்து பயன்படுத்துவதற்கு  அரசாணை எண்.50ன்படி சட்டசபையில் 2021-2022 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெற்று வண்டல் மண் எடுத்து தங்களது வயல்களின் மண்வளத்தை பெருக்கிட தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 39 கண்மாய்கள் விவசாயிகளின் தேவைக்காக வண்டல் மண் வழங்குவதற்கு மாவட்ட அரசிதழில் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

வண்டல்மண் தேவைப்படும் விவசாயிகள் தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு  உரிய விண்ணப்பங்களை வழங்கி அரசு விதிமுறைகளின்படி, கண்மாய்களில் இருந்து வண்டல்மண் எடுத்துச்சென்று  தங்களது  வயல்களின் மண்வளத்தை பெருக்கி  கூடுதல் மகசூல் பெற்று பயனடையுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா. பி.சிங் தெரிவித்துள்ளார்.