×

ராஜிவ்காந்தி குறித்து விமர்சனம் : சீமான் உருவப்படத்தை எரித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்!

 

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி குறித்து விமர்சித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து, திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் அவரது உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து அவதூறாக விமர்சனம் செய்ததாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து திருச்சியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட கட்சி அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் நடந்த போராட்டத்தில், இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் விச்சு என்கிற லெனின் பிரசாத் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ரமேஷ் சந்திரன், ராகுல் காந்தி, மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, சீமானை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். அப்போது, காங்கிரஸ் கட்சியினர் சீமானின் உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.