×

விவேக் எஸ்பிரஸ் விரைவு ரயில் வாரம் இரு முறை இயக்கப்படும் என அறிவிப்பு!

 

திப்ருகர் - கன்னியாகுமரி விவேக் எஸ்பிரஸ் வாராந்திர ரயில், வாரம் இரு முறை இயக்கப்படும் என  அறிவிக்கப்பட்டு உள்ளது

அசாம் மாநிலம் திப்ருகரில் இருந்து கன்னியாகுமரி வரை இயக்கப்படும் விவேக் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் வாராந்திர ரயிலாக இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி முதல் விவேக் எக்ஸ்பிரஸ் வாரம் இரு முறை இயக்கப்படும் என வடகிழக்கு எல்லை ரயில்வே அறிவித்துள்ளது. 

அதன் படி வண்டி எண். 15906 திப்ருகர் - கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் தற்போது சனிக்கிழமைகளில் இயக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 22ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமையும் கூடுதலாக இயக்கப்படுகிறது. இதேபோல், மறுமார்க்கத்தில் வண்டி எண். 15905 கன்னியாகுமரி - திப்ருகர் விவேக் எக்ஸ்பிரஸ் தற்போது வியாழக்கிழமைகளில் இயக்கப்பட்டு வந்த நிலையில், வரும் 27ஆம் தேதி முதல் ஞாயிற்றுக் கிழமைகளிலும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய அறிவிப்பின் படி திப்ருகர் - கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் திப்ருகரில் சனி மற்றும் செவ்வாய்கிழமைகளில் இரவு 7.25 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரியை செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 10 மணிக்கு வந்தடையும். அதேபோல் மறுமார்க்கத்தில் கன்னியாகுமரி - திப்ருகர் விவேக் எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரியில் இருந்து வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.20 மணிக்கு புறப்பட்டு, ஞாயிறு மற்றும் புதன் கிழமை இரவு 8.50 மணிக்கு திப்ருகரை சென்றடையும்.

சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் திப்ருகர் - கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் சேலத்தில் காலை 7.52 முதல் 7.55  மணி வரையிலும், ஈரோட்டில் காலை 8.50 மணி முதல் 8.55 மணி வரையிலும், திருப்பூரில் காலை 9.43 மணி முதல் 9.45 மணி வரையிலும், கோவையில் காலை 10.42 மணி முதல் 10.45 மணி வரையிலும் நின்று செல்லும்.

கன்னியாகுமரி - திப்ருகர் விவேக் எக்ஸ்பிரஸ் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவையில் அதிகாலை 4.12 முதல் 4.15 மணி வரையிலும், திருப்பூரில் அதிகாலை 5.03 முதல் 5.05 வரையிலும், ஈரோட்டில் காலை 5.55 மணி முதல் 6 மணி வரையிலும், சேலத்தில் 6.52 மணி முதல் 6.55 வரை நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.