×

தலைமை ஆசிரியர் கண்டித்ததால் 9ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை... மதுரை அருகே சோகம்!

 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பள்ளி தலைமை ஆசிரியர் கண்டித்ததால் 9ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மேக்கிழார்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாண்டி. கூலி தொழிலாளி. இவரது மகன் ஜெகதீஷ்(14). இவர் அதே பகுதியில் இயங்கி வரும் அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இதனிடையே, ஜெகதீஷ் வகுப்பில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர், அவரை கண்டித்ததுடன், பெற்றோரை வர வழைத்து புகார் தெரிவித்துள்ளர். இதனால் ஜெகதீஷ், மனமுடைந்து காணப்பட்டு உள்ளார். இந்த நிலையில், பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு திரும்பிய ஜெகதீஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மகன் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அவரது உறவினர்கள் தகறி அழுதனர்.

தொடர்ந்து, இதுகுறித்து உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.