×

கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரி வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை!

 

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின் நிலைய அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகைகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் அசோகன் (55). இவர் நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். மேலும், கூடங்குளம் அடுத்த செட்டிக்குளம் பகுதியில் உள்ள அணுமின் நிலைய ஊழியர்கள் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில், அசோகன் கடந்த 1ஆம் தேதி கர்நாடக மாநிலம் கைகா அணுமின் நிலையத்திற்கு பணியிட மாறுதலான நிலையில், குடும்பத்துடன் அங்கு சென்று விட்டார். இதனால் செட்டிக்குளம் பகுதியில் உள்ள அவரது வீடு பூட்டிக்கிடந்துள்ளது. இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அசோகன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது.

 இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் அசோகனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், அசோகன் கூடங்குளம் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில், போலீசார் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது மர்மநபர்கள் அவரது வீட்டில் இருந்த பீரோவை உடைத்து உள்ளே இருந்த 60 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து, தடயவியல் நிபுணர்களை அழைத்து கொள்ளையர்களின் கைரேகை பதிவுகள் சேகரிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மே