×

அரியலூர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 351 மனுக்கள் பெறப்பட்டன!

 

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ரமண சரஸ்வதி தலைமையில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 351 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ரமண சரஸ்வதி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினர். இந்த முகாமில், சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரியும், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 351 மனுக்கள பெறப்பட்டது. அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கிய ஆட்சியர் ரமண சரஸ்வதி, மனுக்கன் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, சென்னையில் நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சர்வதேச சதுரங்க போட்டி, நம்ம செஸ் நம்ம பெருமை என்ற வாசகங்கள் அடங்கிய சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத மஞ்சப்பைகளை, பொதுமக்களுக்கு ஆட்சியர் ரமண சரஸ்வதி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.