×

திண்டுக்கல் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 165 மனுக்கள் பெறப்பட்டன!

 

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆட்சியர் விசாகன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 165 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் விசாகன் தலைமையில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர்.நேற்றைய கூட்டத்தில், பேருந்து வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரியும், வீட்டுமனை பட்டா, புதிய மின்இணைப்பு வசதி, முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை வேண்டுதல் என பொதுமக்களிடம் இருந்து 165 மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் விசாகன், அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி, மனுக்கள் மீது  பரிசீலனை செய்து, தகுதியுடைய மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார்.இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) தினேஷ்குமார்,  மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)  அமர்நாத்,  தனித்துணை ஆட்சியர்( சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜசேகர் உள்ளிட்ட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.