×

சரஸ்வதி பூஜையின் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்!

 

சரஸ்வதி பூஜையான இன்று வீட்டில் சரஸ்வதி விக்ரகம் அல்லது படத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும். பூஜையை கணபதி மந்திரத்துடன் தொடங்கி, சரஸ்வதிக்கு உகந்த காயத்ரி மந்திரம் மற்றும் 108 போற்றி போன்றவற்றைச் சொல்லலாம்.

ஓம் கணபதி காயத்ரி

ஓம் ஏகதந்தாய வித்மகே!

வக்ர துண்டாய தீமகி!

தன்னோ தந்தி ப்ரசோ தயாத்!

சரஸ்வதி காயத்ரி மந்திரம்

ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே

பிரஹ்மபத்ன்யை ச தீமஹி

தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்

அர்ச்சனை செய்யும்போது சொல்ல வேண்டிய சரஸ்வதிக்கு உகந்த மந்திரம்...

ஓம் ஶ்ரீமஹாசரஸ்வத்யே நமஹ

ஓம் ஐம் வாக்தேவ்யை நமஹ

ஓம் ஞான தாயின்யை நமஹ

மலர்களை சூட்டும்போது சொல்ல வேண்டிய மந்திரம்...

மேதே சரஸ்வதிவ்ரே பூதி பாப்ரவிதாமஸி

நியதே தவம் ப்ரசீதெசி நாராயணி நமோஸ்துதே

சரஸ்வதி தேவியின் திரு உருவத்தை தியானிக்க...

யா குந்தேந்து துஷார ஹார தவளா

யா சுப்ர வஸ்த்ராவ்ருதா

யா வீணா வர தண்ட மண்டித கரா

யா ஸ்வேத பத்மாஸனா

யா ப்ரஹ்மாச்யுத சங்கர ப்ரப்ருதிபி:

தேவை: சதா பூஜிதா

சா மாம் பாது ஸரஸ்வதி பகவதி

நிச்சேஷ ஜாட்யாபஹா

இன்று பால் கற்கண்டு சாதம் மற்றும் இனிப்பு பண்டங்கள், சுண்டல் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து பூடம் காண்பித்து வழங்க வேண்டும். பூஜையில் பங்கேற்றவர்களுக்கு சந்தன நிறத்தில் பிளவுஸ் பீஸ், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கள பொருட்களை வழங்கலாம்.

இன்று பூஜை முடித்து புத்தகம் உள்ளிட்டவற்றை எடுக்க வேண்டாம். நாளை காலையில் விஜயதசமி அன்று நல்ல நேரம் பார்த்து பூஜை அறையில் வைத்திருந்த புத்தகங்களை எடுத்துப் படிக்க வேண்டும். குழந்தைகளைப் புத்தகம் படிக்க வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அவர்களுக்கு நல்ல கல்வியறிவு கிடைக்கும்.