×

“மருமகளை கட்டிப்பிடித்தேன் கத்தினாள் வெட்டி கொன்றேன்” கேடுகெட்ட மாமனாரின் பகீர் வாக்குமூலம்!

கை, இடுப்பு என கோடரியால் வெட்டப்பட்டுக் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள உலிபுரத்தைச் சேர்ந்தவர் அறிவழகன். இவருக்கு அமுதா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். அறிவழகன் சொக்கநாதபுரத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் எழுத்தராக பணியாற்றி வருகிறார். இதனால் உலிபுரத்தில் தனக்குச் சொந்தமான தோட்டத்திலேயே வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அதே சமயம் இவருடைய 63 வயதான தந்தை பழனி மற்றும் அம்மா
 

கை, இடுப்பு என கோடரியால் வெட்டப்பட்டுக் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள உலிபுரத்தைச் சேர்ந்தவர் அறிவழகன். இவருக்கு அமுதா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். அறிவழகன் சொக்கநாதபுரத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் எழுத்தராக பணியாற்றி வருகிறார். இதனால் உலிபுரத்தில் தனக்குச் சொந்தமான தோட்டத்திலேயே வீடு கட்டி  குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அதே சமயம் இவருடைய 63 வயதான தந்தை பழனி மற்றும் அம்மா தொட்டம்மாள் இருவருக்கும் வேறு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். 

இந்நிலையில் நேற்று முன்தினம்  தம்மம்பட்டி காவல்நிலையத்திற்கு நேரில் சென்ற அறிவழகனின் தந்தை பழனி மருமகள்  அமுதாவை வெட்டி கொன்றுவிட்டேன். அவள் உடல் தோட்டத்து வீட்டில் உள்ளது என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அமுதா தலை, கை, இடுப்பு என கோடரியால் வெட்டப்பட்டுக் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

இதுகுறித்து பழனி அளித்த வாக்குமூலத்தில்,  நான் மருமகள் அமுதாவை அடைய வேண்டும் என்று பல நாட்களாக நினைத்தேன்.  இதை அவரிடமும் சொல்லியிருக்கிறேன். ஆனால் அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால்  அதே ஊரில் வேறொரு நபருடன் அமுதா நெருக்கமாக இருந்தார்.இதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.  இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவத்தன்று தனியாக இருந்த அமுதாவை  கட்டிப்பிடித்தேன். அவள் கத்தி ஊரை கூப்பிடுவேன் என மிரட்டினாள். அதனால் அவரை கோடரியால் வெட்டி கொன்றேன். பெண் ஆசையில் தவறு செய்துவிட்டோமே என்று நினைத்து சரணடைந்தேன் என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். 

இதையடுத்து பழனியை ஆத்தூர் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்திய போலீசார் நீதிமன்ற உத்தரவின் பேரில், அவரை ஆத்தூர் கிளைச்சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.