×

“தெருக்கோடியில் இருக்கிற என் அக்கவுண்ட்ல கோடிக்கணக்குல பணமா?”-பணப்பரிமாற்றத்தில் நடக்கும் புதிய மோசடி.

ஆப் மூலம் நடக்கும் கடன் மோசடி குறித்து விசாரிக்கும் தெலுங்கானா போலீசாருக்கு, இதில் நடந்த பல மோசடிகள் அதிர்ச்சியடையச் செய்துள்ளது . அவர்களின் விசாரணையின் போது, டெல்லியில் ஒரு தினசரி கூலித் தொழிலாளியின் வங்கிக் கணக்கில் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் பணமிருந்ததை போலீசார் கண்டறிந்தனர் உடனடி கடன் ஆப் மூலம் மோசடி செய்த நபர்களின் வங்கி கணக்குகளை போலீசார் சோதனை செய்த பின்னர் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.இந்த நூதன மோசடி பற்றி விசாரிக்க டெல்லிக்கு வருகை தந்த
 

ஆப் மூலம் நடக்கும்  கடன் மோசடி குறித்து விசாரிக்கும் தெலுங்கானா போலீசாருக்கு, இதில் நடந்த  பல மோசடிகள் அதிர்ச்சியடையச் செய்துள்ளது . அவர்களின் விசாரணையின் போது,   டெல்லியில் ஒரு தினசரி கூலித் தொழிலாளியின் வங்கிக் கணக்கில்  கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் பணமிருந்ததை போலீசார் கண்டறிந்தனர்

உடனடி கடன் ஆப் மூலம் மோசடி செய்த நபர்களின் வங்கி  கணக்குகளை போலீசார் சோதனை செய்த   பின்னர் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.இந்த நூதன மோசடி பற்றி விசாரிக்க

டெல்லிக்கு வருகை தந்த தெலுங்கானா காவல்துறை அதிகாரிகள் குழு, சந்தேகத்திற்கிடமான நபர்களின் வங்கி கணக்குகளை   ஆராய்ந்து பார்த்தனர் .அப்போது  ​​ஒரு  தினசரி கூலி தொழிலாளியின் வங்கி கணக்கில் 1 கோடி பணமிருந்ததை கணடறிந்தனர்  .

இதைவிட அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், தினசரி கூலி தொழிலாளி தனது கணக்கிற்கான    வங்கி கிட், ஏடிஎம் கார்டு அல்லது இணைய வங்கி விவரங்களை வைத்திருக்கவில்லை.

அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையில் , பணப்பரிமாற்றம் செய்பவர்களால் அந்த  தினசரி கூலிதொழிலாளிக்கு ஒரு மாதத்திற்கு ரூ .4,000 வழங்கப்படும் என்று தெரியவந்தது.

இந்த வழக்கை விசாரித்த ஒரு அதிகாரி கூறுகையில் ,”மாதம் 4000 சம்பளம் கொடுத்து தினசரி கூலித் தொழிலாளியின் விவரங்களைப் பயன்படுத்தி ஒரு வங்கி கணக்கு திறக்கப்பட்டது. கணக்கு வைத்திருப்பவருக்கு  தனது கணக்கில் உள்ள பணம் பற்றியும்  தெரியாது, அது தவறாகப் பயன்படுத்தப்படுவதைப்பற்றியும் அவருக்கு தெரியாது”என்றார்  .

இது பற்றி அந்த கூலி தொழிலாளி கூறுகையில் ,” தனது வங்கிக் கணக்கை இயக்கும்அந்த  நபர்களின் பெயரை கூற எங்களுக்கு பயமாக இருக்கிறது . ஏனென்றால் அவர்களிடமிருந்து எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது ” என்று அவர்  அஞ்சுகிறார்.

ஆன்லைன் சூதாட்ட மோசடியில் மோசடி செய்பவர்களும் இந்த மோசடி வழியை  பயன்படுத்துவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.சில சீன  விளையாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யும்போது , கட்டண நுழைவாயில்கள்(கேட் வே ) வணிகத்தின் தன்மையை சரிபார்க்கவில்லை என்றும் போலீசார் நம்புகின்றனர்.