×

‘பேஸ் புக்’கில் ஆரம்பித்து ‘செக் புக்’கில் முடியும் காதல் -சமூக ஊடகத்தில் பெண்களுக்கு வலை வீசுவார் -பணத்தை கறந்து கொண்டு கம்பி நீட்டுவார்

கர்நாடக மாநிலம் உத்ரஹள்ளியில் வசிக்கு ஹரி பிரசாத் என்ற 34 வயது நபருக்கு கல்யாணமாகி ஒரு குழந்தையும் உள்ளது .இந்நிலையில் அந்த பிரசாத் பேஸ்புக்கில் பல பெண்களுடன் நட்பு கொண்டு அவர்களிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாயை ஆட்டைய போட்ட விஷயம் போலீசுக்கு தெரிந்து அவரை கைது செய்தனர் . பெங்களூருக்கருகே உத்ரஹள்ளியில் வசிக்கும் பிரசாத்துக்கு எந்நேரமும் ஆன்லைனில் அமர்ந்துகொண்டு பெண்களுக்கு வலை வீசுவதே வேலை .அப்படி அவர் ஒரு நாள் ஊடகத்தில் எந்த பெண்ணாவது சிக்குகிறாரா என்று பார்த்தபோது
 

கர்நாடக மாநிலம் உத்ரஹள்ளியில் வசிக்கு ஹரி பிரசாத் என்ற 34 வயது நபருக்கு கல்யாணமாகி ஒரு குழந்தையும் உள்ளது .இந்நிலையில் அந்த பிரசாத் பேஸ்புக்கில் பல பெண்களுடன் நட்பு கொண்டு அவர்களிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாயை ஆட்டைய போட்ட விஷயம் போலீசுக்கு தெரிந்து அவரை கைது செய்தனர் .


பெங்களூருக்கருகே உத்ரஹள்ளியில் வசிக்கும் பிரசாத்துக்கு எந்நேரமும் ஆன்லைனில் அமர்ந்துகொண்டு பெண்களுக்கு வலை வீசுவதே வேலை .அப்படி அவர் ஒரு நாள் ஊடகத்தில் எந்த பெண்ணாவது சிக்குகிறாரா என்று பார்த்தபோது பொம்மனாகள்ளி பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண் சிக்கினார் .அவர் ஒரு பொறியாளர் .அந்த பெண்ணிடம் பல மாதங்களாக பேசிய அந்த நபர் ,ஒரு நாள் நேரில் சந்தித்த போது தான் கனடாவில் கார் பிசினெஸ் செய்வதாகவும், அந்த பிசினெஸை மேம்படுத்த 12 லட்சம் தேவையென்றும் கூறினார் .பிறகு நான் உன்னை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று பொய்யான வாக்குறுதியையும் கொடுத்ததால் அதை நம்பிய அந்த பெண் 12 லட்சம் கொடுத்தார் .
பிறகு அவரின் சமூக ஊடக கணக்கை அந்த பெண் பார்த்தபோது அவர் தன்னைப் போல பல பெண்களிடம் நட்பு கொண்டு இப்படி ஏமாற்றி பணம் கறந்த விஷயம் தெரிந்து அதிர்ச்சியடைந்தார் .உடனே அவர் போலீசில் பிரசாத் மீது புகாரளித்தார்.போலீசார் பிரசாத்தை பிடித்து விசாரித்த போது ,அவர் இப்படி ஊடகத்தில் ,பல பெண்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்த விஷயம் வெளியே தெரிந்தது .இப்போது போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் .