×

விருத்தாசலத்தின்  “வசூல்ராஜா MBBS”  -உடலுக்கு போடும் துணியை குடலுக்கு போட்ட டாக்டர்கள்-“infection” ஏற்பட்டு இளம்பெண் இறப்பு…

விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் ப்ரியா என்ற 24 வயது பெண்ணுக்கு சிசேரியன் மூலம் பெண் குழந்தை டிசம்பர் 27 ன் தேதி பிறந்தது .அறுவை சிகிச்சையில் குழந்தை பிறந்ததும் டாக்டர்கள் வயிற்றை தைக்கும்போது ஞாபக மறதியால் துணியையும் சேர்த்து உள்ளே வைத்து தைத்து விட்டனர் .மறுநாள் அப்பெண்ணுக்கு வயிற்றில் கடுமையான வலி எடுக்கவே ,டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி ஜிப்மர்மருத்துவமனைக்கு அப்பெண்ணை அனுப்பி வைத்தனர் . ஜிப்மர் டாக்டர்கள் குழு அப்பெண்ணை சோதித்து அவர் வயிற்றுக்குள் துணி
 

விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில்  ப்ரியா என்ற 24 வயது பெண்ணுக்கு சிசேரியன் மூலம் பெண் குழந்தை டிசம்பர் 27 ன் தேதி பிறந்தது .அறுவை சிகிச்சையில் குழந்தை பிறந்ததும்  டாக்டர்கள் வயிற்றை தைக்கும்போது ஞாபக மறதியால் துணியையும் சேர்த்து உள்ளே வைத்து தைத்து விட்டனர் .மறுநாள் அப்பெண்ணுக்கு வயிற்றில் கடுமையான வலி எடுக்கவே ,டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி ஜிப்மர்மருத்துவமனைக்கு அப்பெண்ணை அனுப்பி வைத்தனர் .

ஜிப்மர் டாக்டர்கள் குழு அப்பெண்ணை சோதித்து அவர் வயிற்றுக்குள் துணி இருப்பதால் அங்கு infection ஆகியுள்ளது ,அதனால் சீழ் பிடித்துள்ளது என்று சிகிச்சையளித்த போதும் அப்பெண் புதன்கிழமை  இறந்து விட்டார்.
அதிர்ச்சியுற்ற   அப்பெண்ணின் கணவர் ராஜ்குமார் மற்றும் உறவினர்கள் தவறாக துணியை வயிற்றில் வைத்து தைத்து மனைவியின் மரணத்துக்கு காரணமான  விருத்தாசலம் அரசு டாக்டர்கள் மீது புகார் அளித்தனர் .போலீசார் hospital க்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர் .

சர்ஜெரி அஸோஸியேஷன் தலைவர் டாக்டர் ரகுராம் இது பற்றி கூறுகையில் ,”அறுவை சிகிச்சை அறையில் இருக்கும் காட்டன் துணிகளை தவறுதலாக உள்ளே வைத்ததால் அப்பெண்ணுக்கு organs செயலிழந்து மரணம் ஏற்பட்டுள்ளது ,இது போல எப்போதாவது தான் நடக்கும் ,operation ரூமில் இருக்கும் பொருள்களின் மீது டாக்டர்களும் ,நர்ஸுகளும் கவனமாக இருக்க வேண்டும் “என்று தெரிவித்தார் .