×

வங்கியின் மிரட்டலுக்கு பயந்து தாயுடன் தீக்குளித்த 19 வயது மாணவி: கேரளாவில் பரபரப்பு!?

கடன் தொல்லையால் இளம்பெண் ஒருவர் தாயுடன் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா: கடன் தொல்லையால் இளம்பெண் ஒருவர் தாயுடன் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின்கரையைச் சேர்ந்தவர் சந்திரன். இவருக்கு லேகா என்ற மனைவியும் வைஷ்ணவி என்ற மகளும் இருந்துள்ளனர். சந்திரன் வளைகுடா நாட்டில் வேலைபார்த்து வந்துள்ளார். வைஷ்ணவி தனியார் கல்லூரியில் பி.பி. ஏ படித்து வந்துள்ளார். வருமானம் இருந்ததால் வீடு ஒன்றைக் கட்ட திட்டமிட்ட தம்பதி ஒரே மகள்
 

கடன் தொல்லையால் இளம்பெண் ஒருவர் தாயுடன் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளா:  கடன் தொல்லையால் இளம்பெண் ஒருவர் தாயுடன் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம்  திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின்கரையைச் சேர்ந்தவர் சந்திரன். இவருக்கு லேகா என்ற மனைவியும் வைஷ்ணவி என்ற மகளும்  இருந்துள்ளனர். சந்திரன் வளைகுடா நாட்டில் வேலைபார்த்து வந்துள்ளார். வைஷ்ணவி தனியார் கல்லூரியில் பி.பி. ஏ படித்து வந்துள்ளார். வருமானம் இருந்ததால்  வீடு ஒன்றைக் கட்ட திட்டமிட்ட தம்பதி ஒரே மகள் வைஷ்ணவி பெயரில் வீட்டைக் கட்டியுள்ளனர். இதற்காக கனரா வங்கியிலிருந்து ரூ. 5 லட்சத்தைக் கடனாகப் பெற்றுள்ளனர்.

இதையடுத்து சந்திரனுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அவரால் வளைகுடா நாட்டில் வேலையைத் தொடர முடியாமல் போயுள்ளது. இதனால் சொந்த ஊர் திரும்பிய அவர், கிடைக்கும் வேலையைச் செய்து வந்துள்ளார். இதனால் குடும்பம் நொடிந்து போயுள்ளது.  இதைத் தொடர்ந்து வீடு கட்ட வாங்கிய கடனை ரூ.8 லட்சம் வரை செலுத்தியுள்ள நிலையில், மேலும் ரூ.6.80 லட்சம் செலுத்த வேண்டுமென்று வங்கி அதிகாரிகள் நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மகள் பெயரில்  கட்டி வந்த வீட்டையும், அதைச் சுற்றியுள்ள நிலத்தையும் விற்று கடனை கட்டி விடுவதாக வாங்கி அதிகாரிகளுக்கு லேகா உறுதி அளித்துள்ளார். ஆனால்  நிலத்தை  விற்க முடியாமல் போனதால் லேகாவுக்கு தொடர்ச்சியாக போன் செய்து மிரட்டிய அதிகாரிகள் வீடு மற்றும் நிலத்தைக் கையகப்படுத்தப் போவதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை லேகாவுக்கு போன் செய்த அதிகாரிகள் வீட்டைப் பறிமுதல் செய்யப்போகிறோம் என்று மீண்டும் மிரட்டியதாகத் தெரிகிறது. ஏற்கனவே பயத்திலிருந்த லேகா, மானம் மரியாதையைப் போகப் போகிறது என்று புலம்பியுள்ளார். இதைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்த வர மகள் வைஷ்ணவியுடன் தீக்குளித்தார். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு, ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் தாய், மகள் இருவரையும் மீட்டு  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே வைஷ்ணவி இறந்துவிட, லேகா சிகிச்சை பெற்று வருகிறார்.

கடன் தொல்லை காரணமாகத் தாய் மற்றும் மகள் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.