×

லிஃப்ட்டில் சிக்கிக்கொண்ட அரசு பெண் ஊழியர் ! அடுத்த வினாடிகளில் நடந்த பரபரப்பு….

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மின்தூக்கியில் சிக்கிக்கொண்ட அரசு பெண் ஊழியர் நீண்ட போராட்டத்துக்கு பின் காப்பாற்றப்பட்டார். இதனால் சுமார் 15 நிமிடங்கள் அங்கு பரபரப்பு நிலவியது. டெங்குவை கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள், சுகாதாரத் துறையினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலரான பொற்செல்வி
 

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மின்தூக்கியில் சிக்கிக்கொண்ட அரசு பெண் ஊழியர் நீண்ட போராட்டத்துக்கு பின் காப்பாற்றப்பட்டார். இதனால் சுமார் 15 நிமிடங்கள் அங்கு பரபரப்பு நிலவியது.

டெங்குவை கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள், சுகாதாரத் துறையினர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலரான பொற்செல்வி இரண்டாவது மாடியில் இருந்து தரைதளத்திற்கு வரை மின்தூக்கி என்றழைக்கப்படும் லிஃப்ட் பயன்படுத்தினார். அப்போது மின்சாரம் தடைபட்டதால் 2 மாடிகளுக்கு நடுவில் லிஃப்ட் நின்றுபோனது. இதனால் இருளில் சிக்கித் தவித்தார்  பொற்செல்வி. லிஃப்ட்டில் இருந்த மின்விசிறியும் மின் தடை காரணமாக நின்று விட்டதால் போதிய காற்று இல்லாமல் அவதிப்பட்டார். இதனால் பயந்து போன பொற்செல்வி  காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என அலறினார். பின்னர் அங்கு விரைந்த லிப்ட் ஆப்ரேட்டரான பாஸ்கர், பாதுகாப்புச் சாவியை பயன்படுத்தி மின்தூக்கியை திறந்து உள்ளே சிக்கித் தவித்த பொற்செல்வியை பத்திரமாக மீட்டார்.

சுமார் 15 நிமிடங்களுக்கு பின்னர் மின்தூக்கியில் இருந்து பத்திரமாக மீட்டவுடன் வெளியே வந்ததும் பாஸ்கருக்கு நன்றி தெரிவித்தார் பொற்செல்வி. பின்னர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டபோது மின்தூக்கிக்காக வைக்கப்பட்ட மின்கலத்தில் கோளாறு ஏற்பட்டதாலும், அதனால் மின்தடை ஏற்பட்டு மின்தூக்கி செயலிழந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 2 மாடி உள்ள கட்டிடங்களில் லிஃப்ட் பயன்படுத்தாமல் படிக்கட்டை பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். இதுபோன்ற அசம்பாவித சம்வங்களிலும் சிக்க நேரிடாது.