×

ரிப்பேர் ஆன செல்போனை சரி செய்ய காவல் அதிகாரி போல் நடித்த இளைஞர் !! உள்ளூர் போலீசை மிரட்டியதாக கைது !!

உத்தரபிரதேச மாநிலம் பிலேரியா கிராமத்தில் வசித்து வரும் 23 வயதான உபத்யாய என்ற இளைஞர் ஒரு விவசாயியின் மகன். இவர் போட்டித் தேர்வில் பங்கேற்க படித்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையே இவரது செல்போன் ரிப்பேர் ஆகிவிட்டது. உத்தரபிரதேசத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போல் நடித்து செல்போனை ரிப்பேர் செய்துவிட்டு வருமாறு போலீசுக்கு உத்தரவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பிலேரியா கிராமத்தில் வசித்து வரும் 23 வயதான உபத்யாய என்ற இளைஞர் ஒரு விவசாயியின் மகன். இவர் போட்டித்
 

உத்தரபிரதேச மாநிலம் பிலேரியா கிராமத்தில் வசித்து வரும் 23 வயதான உபத்யாய என்ற இளைஞர் ஒரு விவசாயியின் மகன். இவர் போட்டித் தேர்வில் பங்கேற்க படித்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையே இவரது செல்போன் ரிப்பேர் ஆகிவிட்டது.

உத்தரபிரதேசத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போல் நடித்து செல்போனை ரிப்பேர் செய்துவிட்டு வருமாறு போலீசுக்கு உத்தரவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் பிலேரியா கிராமத்தில் வசித்து வரும் 23 வயதான உபத்யாய என்ற இளைஞர் ஒரு விவசாயியின் மகன். இவர் போட்டித் தேர்வில் பங்கேற்க படித்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையே இவரது செல்போன் ரிப்பேர் ஆகிவிட்டது. அதை ரிப்பேர் செய்து கொடுக்குமாறு உள்ளூர் மொபைல் செல்போன் கடைக்காரர்களை அணுகினார். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். பின்னர் தலைநகர் லக்னோவுக்கு செல்ல முயற்சி செய்தார். ஆனால் ஊரடங்கு காரணமாக மாவட்ட எல்லைகள் மூடப்பட்டதால் அவரால் கடக்க முடியவில்லை. பின்னர் வீட்டிற்கு திரும்பிய உபத்யாய செல்போனில் இலவசமாக அழைப்பு (Free Caller Identification) மேற்கொள்ளும் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்தார். அதில் தன்னுடைய பெயர் Azamgarh (SP) அதாவது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என பதிவிட்டுள்ளார். மேலும் அசம்காரின் புகைப்படத்தையும் தன்னுடைய புரபைலில் பதிவேற்றினார்.

பின்னர் அவர் அந்த செயலி மூலம் கோத்வாலி காவல் நிலைய பொறுப்பாளர் கே. கே. குப்தாவை அழைத்து ஓழுங்காக வேலை செய்ய வேண்டும். இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டினார். பின்னர் அவரிடம் தன்னுடைய செல்போன் ரிப்பேர் ஆகிவிட்டதாகவும், உடனே வந்து வாங்கிச் சென்று ரிப்பேர் செய்து தருமாறும் மிரட்டி உள்ளார். 
பின்னர் ஒரு தொழிலதிபருக்கு போன் செய்து அவருடைய காரை எடுத்து வருமாறு கூறி செல்போனை அவரிடம் கொடுத்து குப்தாவிடம் கொடுக்கச் சொல்லி இருக்கிறார். முதலில் எஸ்.பி. அலுவலகத்துக்கு வரச்சொன்ன உபத்யாய மறுபடியும் வேறு தனி இடத்தை கூறியதால் கோத்வாலி காவல் நிலைய பொறுப்பாளர் குப்தா சந்தேகம் அடைந்தார். சரியான இடத்தை கூறுமாறு குப்தா கேட்க செல்போனை ஒரு உதவியாளரிடம் தந்து அனுப்புவதாக கூறினார். பின்னர் சந்தேகம் அடைந்த குப்தா நேரிடையாக மாவட்ட எஸ்.பியிடம் விசாரித்தார். அவர் அந்த தகவலை மறுக்கவே, உபத்யாயவின் செல்போன் விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் உபாத்யாயாவை போலீசார் கைது செய்தனர்.