×

ராணுவ வீரரால் 4 வயது குழந்தைக்கு நடந்த கொடூரம்: மகன் மிரட்டுவதாக சிறுமியின் தந்தை புகார்!

4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்ட வழக்கில் கைதாகியுள்ள முன்னாள் ராணுவ வீரரின் குடும்பத்தினர் தங்களை மிரட்டுவதாகக் கொல்லப்பட்ட சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார். திருமுல்லைவாயல் : 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்ட வழக்கில் கைதாகியுள்ள முன்னாள் ராணுவ வீரரின் குடும்பத்தினர் தங்களை மிரட்டுவதாகக் கொல்லப்பட்ட சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார். ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் அந்தோணி நகர் 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள
 

4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்ட  வழக்கில் கைதாகியுள்ள முன்னாள் ராணுவ வீரரின் குடும்பத்தினர் தங்களை மிரட்டுவதாகக் கொல்லப்பட்ட சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார். 

திருமுல்லைவாயல் : 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்ட  வழக்கில் கைதாகியுள்ள முன்னாள் ராணுவ வீரரின் குடும்பத்தினர் தங்களை மிரட்டுவதாகக் கொல்லப்பட்ட சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார். 

ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் அந்தோணி நகர் 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செந்தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு 2 குழந்தைகள் இருந்தனர். இவர்கள் இதே பகுதி வைஷ்ணவி நகரில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு மற்றும் எல்கேஜி படித்து வந்தனர். 

கடந்த 27ஆம் தேதி  மாலை 5 மணியளவில் செந்தமிழ்ச்செல்வி தனது மகன் கார்முகிலனை வீட்டிலிருந்து டியூஷனுக்கு அழைத்துக் கொண்டு சென்றார். அப்போது வீட்டில் மகளை மட்டும் உள்ளே விட்டுவிட்டு கேட்டை பூட்டாமல் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து மீண்டும் செந்தமிழ்ச்செல்வி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் மகளை காணவில்லை. உடனே பதறிப்போய் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பல்வேறு இடங்களில் தேடி உள்ளார். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து செந்தமிழ்ச்செல்வி திருமுல்லைவாயல் காவல் நிலையத்துக்குச் சென்று தகவல் தெரிவித்துள்ளார். 

புகாரின் அடிப்படையில் நடத்திய விசாரணையில் குழந்தையின் பக்கத்து வீட்டை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது. இதற்கு அவரது மனைவி ராஜம்மாளும் உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து அவர்கள்  இருவர் மீதும்  போக்சோ பிரிவிலும், கொலை தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு  புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

நம்  சமூகம் இதுபோன்ற படுபாதக சம்பவங்களை  தொடர்ந்து சந்தித்து வருகிறது. குறிப்பாக உறவு முறை சொல்லி அழைக்கும்  அளவிற்கு நட்பாக பழகிய ஒருவர் இதுபோன்ற கொடூர செயலில் ஈடுபடுவது மீளா துயரத்தை அந்த குடும்பத்தினருக்கு அளித்து விடுகிறது. இந்த சூழலில் குழந்தையை இழந்த சோகத்தில் இருக்கும் அந்த பெற்றோரை மேலும் அச்சுறுத்தும் வகையில் மீனாட்சி சுந்தரத்தின் மகன் வழக்கை வாபஸ் வாங்குமாறு கூறி மிரட்டி வருவதாக தெரிகிறது.  இதுகுறித்து சிறுமியின் தந்தை சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்தித்து மனு அளித்துள்ளார். 

குற்றவாளிகளைத் தப்பிக்க விடமாட்டோம். அவர்களுக்கான தண்டனை நிச்சயம் கிடைக்கும் என்று போலீசார் தரப்பில்  கூறப்பட்டாலும், நாளுக்கு நாள் இந்த சமூகத்தில் நடக்கும்  அசம்பாவிதங்களை காணும் போது  இனி வரும் காலங்களில்  நம் நாடு வாழும் சூழலில் இருக்குமா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.