×

மருத்துவமனையில் குழந்தையை கடித்து குதறிய நாய்கள்: தொடரும் அரசு மருத்துவமனைகளின் அலட்சியம்!

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 வயது குழந்தையை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் : அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 வயது குழந்தையை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் மருத்துவமனையில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த புனிதவள்ளி என்ற 4 வயது குழந்தை உடல்நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனை படுக்கையிலிருந்த குழந்தையை அந்த வளாகத்தைச்
 

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 வயது குழந்தையை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் : அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 வயது குழந்தையை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் மருத்துவமனையில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த புனிதவள்ளி என்ற 4 வயது குழந்தை உடல்நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனை படுக்கையிலிருந்த குழந்தையை அந்த வளாகத்தைச் சுற்றி திரிந்த ஐந்து நாய்கள் திடீரென்று கடித்துக் குதறியுள்ளது. இதைக்கண்ட அங்கிருந்தவர்கள்  நாய்களை விரட்டி, குழந்தையைக் காப்பாற்றினர். 

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும், மருத்துவர்கள் அங்கு சுமார் 2மணிநேரம் கழித்தே வந்துள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த அங்கிருந்த உள்நோயாளிகள் மருத்துவமனையைச் சுற்றி அதிக நாய்கள் சுற்றி திரிகிறது. அதனால் அவற்றை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.