×

பொள்ளாச்சி வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த பெண் ஆய்வாளர் தூக்கு போட்டு தற்கொலை: விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்?!

பெண் காவல் ஆய்வாளர் ஜெய்ஹிந்த் தேவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவந்துள்ளது. விழுப்புரம்: பெண் காவல் ஆய்வாளர் ஜெய்ஹிந்த் தேவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவந்துள்ளது. பெண் காவல் ஆய்வாளர் ஜெய்ஹிந்த் தேவி விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள காவேரிப்பாக்கத்தில் வசித்து வருபவர் ஜெய்ஹிந்த் தேவி. இவர் நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் பெண் ஆய்வாளராகப் பணி புரிந்து வந்தார். காவல் ஆய்வாளர் பணிக்கு முன்பாக இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக
 

பெண் காவல் ஆய்வாளர் ஜெய்ஹிந்த் தேவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

விழுப்புரம்: பெண் காவல் ஆய்வாளர் ஜெய்ஹிந்த் தேவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவந்துள்ளது. 

பெண் காவல் ஆய்வாளர் ஜெய்ஹிந்த் தேவி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள காவேரிப்பாக்கத்தில் வசித்து வருபவர் ஜெய்ஹிந்த் தேவி.  இவர்  நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் பெண் ஆய்வாளராகப் பணி புரிந்து வந்தார். காவல் ஆய்வாளர் பணிக்கு முன்பாக இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்துள்ளார்.அப்போது தன்னுடன் பணிபுரிந்து வந்த  மாணிக்கவேலு என்பவரைக்  காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கடந்த 2004-ம் ஆண்டு போலீஸ் தேர்வில் ஜெய்ஹிந்த்தேவி வெற்றி பெற்று கடலூர் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார். இந்த தம்பதியினருக்கு அபிதா, அட்சயா என 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

தற்கொலை

இந்நிலையில் ஜெய்ஹிந்த் தேவி நேற்று தனது வீட்டில்  தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் என்னவென்று தற்போது தெரியவந்துள்ளது. 
கடந்த சில மாதங்களாகக் கணவர் மாணிக்கவேலுவுக்கும், ஜெய்ஹிந்த்தேவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால்  அவர் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். 

கணவன்-மனைவி இடையே  தகராறு

 

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு பணி முடிந்ததும் ஜெய்ஹிந்த்தேவி, நெய்வேலியிலிருந்து திண்டிவனத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். அப்போது  கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  இதனால் மனமுடைந்த ஜெய்ஹிந்த்தேவி தனது  அறைக்குச் சென்று கதவை உள்பக்கமாகப் பூட்டிக் கொண்டுள்ளார். இதை தொடர்ந்து  காலை வெகுநேரமாகியும்  திறக்கப்படாததால் அவரது கணவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது புடவையால் தூக்கிட்டபடி  ஜெய்ஹிந்த்தேவி பிணமாக தொங்கியுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் மாணிக்கவேலு உறவினர்கள், மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். 

வழக்குப்பதிவு செய்து விசாரணை

இதற்கிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி ஆகியோர் இவ்விவகாரம் குறித்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.  விசாரணையில் ஜெய்ஹிந்த்தேவி கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும்  இது தொடர்பாக திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து ஜெய்ஹிந்த்தேவியின் உடலை போலீசார் கைப்பற்றிய போலீசார்  பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

சிறப்பாக பணியாற்றி  வந்த ஜெய்ஹிந்த்தேவி

 

முன்னதாக காவல் துறையில் சிறப்பாக பணியாற்றி  வந்த ஜெய்ஹிந்த்தேவி பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லுாரி மாணவ, மாணவிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.  ஆனால்  சாதுர்யமாக அவர்களைச் சமாதானம் செய்த ஜெய்ஹிந்த் தேவி ஆர்ப்பாட்டத்தை சில மணிநேரங்களிலேயே, ஒன்னும்மில்லாமல் செய்து சகா காவலர்களால் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: சிறுமியை கட்டாய திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்: அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!