×

பைனான்சியரை கை, கால்களைக் கட்டி உப்பு போட்டு முக்குளம் ஏரியில் புதைத்த நண்பர்; தர்மபுரியில் பரபரப்பு!

கள்ளக்காதல் விவகாரத்தில் பைனான்சியர் ஒருவரை நண்பரே கொலை செய்து புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி: கள்ளக்காதல் விவகாரத்தில் பைனான்சியர் ஒருவரை நண்பரே கொலை செய்து புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், சின்னமுத்தூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன். இவர் கடந்த சில நாட்களாகக் காணாமல் போன நிலையில் அவரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலரிடம் லட்சுமணனின் நண்பர் ரங்கநாதன், லட்சுமணனை தான்தான் கொன்று தர்மபுரியிலுள்ள முக்குளம் ஏரியில்
 

கள்ளக்காதல் விவகாரத்தில் பைனான்சியர் ஒருவரை நண்பரே கொலை செய்து புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தர்மபுரி: கள்ளக்காதல் விவகாரத்தில் பைனான்சியர் ஒருவரை நண்பரே கொலை செய்து புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம், சின்னமுத்தூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன். இவர் கடந்த சில நாட்களாகக் காணாமல் போன நிலையில் அவரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.  இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலரிடம் லட்சுமணனின் நண்பர் ரங்கநாதன், லட்சுமணனை தான்தான் கொன்று தர்மபுரியிலுள்ள  முக்குளம் ஏரியில் புதைத்து விட்டதாகக் கூறி சரணடைந்தார். 

ரங்கநாதனின் தகவலின் படி  லட்சுமணனின் சடலத்தை போலீஸார் தோண்டியெடுத்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. அதில்,  சின்னமுத்தூரில் பைனான்ஸ் தொழில் செய்து வந்த லட்சுமணனுக்கும் ரங்கநாதனுக்கும் பணம் கொடுக்கல் வாங்கலின் போது  பழக்கம் ஏற்பட்டுள்ளது.லட்சுமணன் திருமணம் செய்யாமலேயே ஒருபெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில், ரங்கநாதன் வீட்டிற்கு வந்து போகும் போது  ரங்கநாதனின் பெண் தோழியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  இதையறிந்த ரங்கநாதன் பலமுறை லட்சுமணனை கண்டித்துள்ளார்.இருப்பினும் அவர் கள்ளக்காதலைக் கைவிடாததால், கடந்த மாதம் 3-ம் தேதி லட்சுமணனை  காரில் கடத்தி கொலை செய்த ரங்கநாதன் , கை, கால்களைக் கட்டி உப்பு போட்டு முக்குளம் ஏரியில் புதைத்துள்ளது தெரியவந்தது. 

இதைத் தொடர்ந்து ரங்கநாதன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.